மியான்மரின் மேற்கு பகுதியில் உள்ள ராகைன் மாநிலத்தில் இடம்பெற்ற வான்வழி தாக்குதலில் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், 36 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த கிளர்ச்சிக் குழுவான அரக்கன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கியாவ்க்டாவ் பகுதியில், உள்ளூர் சந்தைக்கு அருகில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
அரக்கன் இராணுவம் வெளியிட்ட தகவலின்படி, நண்பகல் வேளையில் போர் விமானம் ஒன்று சந்தைக்கு அருகில் இரண்டு குண்டுகளை வீசியுள்ளது.
இதன்போது, சந்தையில் இருந்த வியாபாரிகள், பொருட்கள் வாங்க வந்தவர்கள் மற்றும் பாதசாரிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 36 பேர் காயமடைந்துள்ளதாக அரக்கன் இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தகவல்கள் தொடர்பாக சுயாதீனமான உறுதிப்படுத்தல் உடனடியாக கிடைக்கவில்லை.
மியான்மரில் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, இராணுவத்துக்கும் ஜனநாயக ஆதரவு எதிர்ப்பு படைகள் மற்றும் இன ஆயுதக் குழுக்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், ராகைன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ள இந்த வான்வழி தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Font size:
Print
Related Posts
