லலித் – குகன் வழக்கு! நீதிமன்றில் சாட்சியமளித்த கோட்டாபய

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

லலித்  மற்றும் குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி நிகழ்நிலையில் சாட்சியமளித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான ஆட்கொணர்வு விசாரணையில், கோட்டாபய ராஜபக்ஷ முக்கிய சாட்சியாளராக அழைக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்திருந்தார்.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் முன்னதாக அவருக்கு காணொளி இணைப்பு ஊடாக சாட்சியமளிக்க அனுமதி வழங்கியிருந்தது.

இன்றைய சாட்சியப் பதிவுகளின் பின்னர், மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ தரப்பு சட்டத்தரணி சுரங்க பெரேராவும், பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி நூவான் போபகேவும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

Related Posts