கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் தமிழருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்றின் மீது அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள ஜெயசாயி என்ற நகைக்கடையே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த துப்பாக்கிச் சூட்டில், கடையின் சில பகுதிகளில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் அதிகாலை வேளையில் இடம்பெற்றதால், அந்த நேரத்தில் கடைக்குள் பணியாளர்கள் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகளை கனேடிய பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் துப்பாக்கிச் சூட்டின் பின்னணி தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Font size:
Print
Related Posts
