அமெரிக்காவில் கடலில் விழுந்த ஹெலிகாப்டர்; இருவர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சலீஸ் அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கேடலினா தீவிலிருந்து பிரதான நிலப்பரப்பில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்வதற்காக ஹெலிகாப்டர் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹெலிகாப்டர் கடலில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த நான்கு பேரை மீட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், மற்ற இருவர் சீரான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காணாமல் போயுள்ள ஐந்தாவது நபரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடலோரக் காவல்படையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறையின் நீச்சல் வீரர்கள் இணைந்து இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts