ஹார்முஸ் ஜலசந்தியில் குவைத் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது; இந்திய மாலுமிகள் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், மேற்காசிய நாடான ஈரானுக்கும் இடையேயான நேரடி போர் தணிந்தாலும் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. தங்கள் முன் அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலும் நடத்தி வருகிறது.
அந்த வகையில் ஹார்முஸ் ஜலசந்தியில் குவைத் நாட்டின் எம்.டி கசிமா III என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஓமனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை; ஹார்முஸ் ஜலசந்தியில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான குவைத் நாட்டு எண்ணெய் கப்பலில் இருந்த இந்தியர்கள் 5 பேரை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் 5 பேரும் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்கு ஆதரவு அளித்த ஓமன் நாட்டு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என கூறப்பட்டுள்ளது.
Font size:
Print
Related Posts
