மனிதநேயத்துடன் நடந்துகொண்ட மன்னார் மீனவர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மன்னார் கடலில் மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை ஒன்றை மன்னார் மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டு மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை, இடம்பெற்றுள்ளது.

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் குறித்த கடல் ஆமை சிக்கியுள்ளது.

இதனை அறிந்த மன்னார் மீனவர்கள், வலையில் சிக்கியிருந்த ஆமையை கடும் போராட்டத்தின் மத்தியில் தமது படகில் ஏற்றியுள்ளனர்.

ஆமையை பாதுகாப்பாக மீட்கும் நோக்கில், தங்களின் பெறுமதியான மீன்பிடி வலையையே வெட்டியுள்ளனர்.

இதன் மூலம் வலையில் இருந்து ஆமையை காயமின்றி மீட்ட மீனவர்கள், அதனை மீண்டும் கடலில் பாதுகாப்பாக விடுவித்துள்ளனர்.

மீனவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், கடல்வாழ் உயிரினத்தின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் எடுத்த நடவடிக்கை பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

அரிய கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் மன்னார் மீனவர்கள் மேற்கொண்ட இந்த மனிதநேய செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Related Posts