உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 19 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா–உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.

அதேவேளை, பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று அதிகாலை உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பாரிய தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

இந்தத் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 60 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலால் பல்வேறு பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts