நடுவானில் விமானத்தை தாக்கிய மின்னல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடுவானில் பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தை மின்னல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நோக்கி சென்ற இண்டிகோ விமானமே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

விமானம் சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 104 பயணிகள் மற்றும் 6 விமானக் குழுவினர் என மொத்தம் 110 பேர் பயணம் செய்துள்ளனர்.

மின்னல் தாக்கியதில் விமானத்தின் மூக்குப் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும், விமானி சாதுர்யமாக விமானத்தை இயக்கி, பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் அனைவரையும் பாதுகாப்பாக லக்னோ விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.

இதையடுத்து, விமானம் உரிய பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான பரிசோதனைகள் நிறைவடைந்து, உரிய அனுமதிகள் பெறப்பட்ட பின்னரே விமானம் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Related Posts