முத்துக்குமரன் என்னை ஏமாற்றிவிட்டார்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

பேச்சுப் போட்டிகள் மூலம் பிரபலமான முத்துக்குமரன், பின்னர் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் பிரபலமான வஹிதா என்ற பெண், முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த காணொளியில், தான் ஏற்கனவே திருமணம் முடிந்தவர் என்பதும், தனக்கு ஐந்து வயது மகன் இருப்பதும் முத்துக்குமரனுக்கு தெரியும் எனவும் அந்தப் பெண் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தான் ஏற்கனவே காதல் தோல்வியில் இருந்த நிலையில், முத்துக்குமரனின் காதல் தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இருவருக்கும் உடல் ரீதியான தொடர்பு இருந்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் உயிருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பாக முத்துக்குமரன் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தானும் வஹிதாவும் நல்ல நண்பர்கள் எனவும், அவர் ஏன் இவ்வாறு செய்தார் என்பது தனக்கு தெரியவில்லை எனவும், அது தொடர்பாக தான் விளக்கம் கேட்டுள்ளதாகவும் முத்துக்குமரன் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவர் ஏற்கனவே மன அழுத்தம் போன்ற நிலையில் இருந்ததாகவும் முத்துக்குமரன் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பெண் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை மற்றும் சம்பவத்தின் முழுமையான பின்னணி தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.

Related Posts