களுத்துறையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் மரணம் ; ஒருவர் படுகாயம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

களுத்துறையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.

களுத்துறை – நாகொட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் மீது இன்று (09) காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் மனைவியும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Related Posts