மூத்த அரசியல் ஆய்வாளர் காலமானார்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ்த் தேசிய அரசியலின் முன்னணி கோட்பாட்டாளரும், மூத்த அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ. ஜோதிலிங்கம் காலமானார்.

தமிழ்த் தேசிய இனத்தின் மீதான பற்றுடன், மக்களின் அரசியல் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காகத் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர் சி.அ. ஜோதிலிங்கம்.

தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாகச் செயற்பட்ட இவர், அரசியல் ஆய்வாளராகவும் சட்டத்தரணியாகவும் மட்டுமன்றி, ஓய்வுநிலை ஆசிரியராகவும் மக்கள் பணியாற்றியுள்ளார்.

வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கட்டியொன்றை அகற்றுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு நீண்ட அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவு தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் அரசியல் ஆய்வுத்துறையில் ஈடுபட்டவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர், கல்வியாளர் என பல வகிபாகங்களை கொண்டுள்ள இவர் ஈழ அரசியல், தமிழ் தேசிய அரசியல் மற்றும் இலங்கை அரசியல் வரலாற்றுக் கட்டமைப்பு குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts