அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாகப் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாகவும் ட்ரம்ப் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஈரான் அணு ஆயுதத்தைப் பெற அனுமதிக்கப்படாது என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தணிவதற்கான அறிகுறியா என்பது குறித்து மேலதிக முன்னேற்றங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது.
