ரியாத் கிங் கலீத் விமான நிலையம் மீது தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் விமானக் கேப்டன் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமனில் அரசுப் படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் சவுதி அரேபியா அரசுப் படையினருக்கு ஆதரவளித்து வரும் நிலையில், ஈரான் ஹவுதி அமைப்புக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏமனில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள பின்னணியில், சவுதி அரேபியா மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீதானதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தாக்குதலின் முழுமையான விபரங்கள், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் சேதங்கள் தொடர்பான தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

Related Posts