தான்சானியாவில் விபத்து ; 28 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் லோறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்திலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தான்சானியாவின் டர் எஸ் சலாம் நகரிலிருந்து எம்பெயா நகரை நோக்கி 30 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து இன்று அதிகாலை பயணித்துக்கொண்டிருந்தது.

இதன்போது, மொரோகொரோ – டர் எஸ் சலாம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்பரானி பகுதியில், எதிரே வந்த லோறியுடன் பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது.

மோதலைத் தொடர்ந்து பேருந்தில் தீப்பற்றியதில், அதில் பயணித்த 28 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மீட்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts