Font size:
Print
மன்னார்–யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
இன்று, காலை, பள்ளமடு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றுக்குப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பேருந்து, பள்ளமடு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் 20 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts
