பசுபிக் அல்லது அட்லாண்டிக் பெருங்கடலுக்கு “ட்ரம்ப் பெருங்கடல்” எனப் பெயர் மாற்றலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் யோசனை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவின் டென்னசி மாநிலம் கிளார்க்ஸ்வில்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பசுபிக் அல்லது அட்லாண்டிக் பெருங்கடலுக்கு “ட்ரம்ப் பெருங்கடல்” அல்லது “அமெரிக்க கண்டங்களின் பெருங்கடல்” எனப் பெயரிடலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, மெக்சிகோ வளைகுடாவை “அமெரிக்கா வளைகுடா” எனப் பெயர் மாற்றுவதற்கான உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்திருந்தார். அண்மையில் ஒன்ராறியோ ஏரியை “அமெரிக்கா ஏரி” எனப் பெயரிடுவதற்கும் அவரது நிர்வாகம் நடவடிக்கை
மேலும், நியூ மெக்சிகோ மாநிலத்தின் பெயரை “நியூ அமெரிக்கா” என மாற்றுவது தொடர்பாகவும் அவர் யோசனை முன்வைத்திருந்தார்.
எனினும், பெருங்கடலின் பெயரை மாற்றுவது தொடர்பாக ட்ரம்ப் தற்போது யோசனையை மட்டுமே முன்வைத்துள்ளார். பசுபிக் அல்லது அட்லாண்டிக் பெருங்கடலின் பெயர் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
உலகின் முக்கியமான புவியியல் இடங்களுக்குப் பெயர் மாற்றுவது தொடர்பான ட்ரம்பின் கருத்துகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
Font size:
Print
Related Posts
