துருக்கியில் சுற்றுலாப் பேருந்தும் இழுவை வாகனமும் மோதிய கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.
துருக்கியின் மணிசா மாகாணத்தில், அகிசார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கட்டணச் சாவடிப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று, 11ஆம் திகதி முற்பகல் 11 மணிக்குப் பின்னர் விபத்து தொடர்பில் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரப் பலகைகளை ஏற்றிச் சென்ற இழுவை வாகனமும், சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மோதலின் தாக்கத்தில் பேருந்தின் பின்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், பேருந்தும் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
துருக்கியில் இடம்பெற்ற இந்தப் பேருந்து விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Font size:
Print
Related Posts
