சவுதி அரேபியா மட்டுமின்றி இஸ்ரேலையும் தாக்கி அழிக்கும் வகையில் சீனா உதவியுடன் நவீன ரக ஏவுகணைகளை ஹவுதிகள் தயாரிப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாத அமைப்பு, சீன நிறுவனங்களிடம் இருந்து உபகரணங்களைப் பெற்று நவீன ஏவுகணைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஏவுகணைகள் ஈரானின் பாலிஸ்டிக் ரக ஏவுகணையான 'கெய்பர் செகான்' மாதிரியில் உருவாக்கப்பட்டு வருகிறது.
தடுப்பு அமைப்புகளுக்கு தண்ணி காட்டிவிட்டு தப்பிச் சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணைகளால் சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கையும் தாக்கி அழிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
ஐ.நா.வால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹவுதிக்கள், சீன நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு உபகரணங்களைப் பெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹவுதிகளின் ஆயுதத் தயாரிப்புத் திறன் அதிகரிக்கிறதா, இந்த முன்னேற்றம் மத்திய கிழக்கின் பாதுகாப்புச் சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கண்காணிப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
