அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் மற்றும் ஓர் ஆசிரியர் உயிரிழந்துள்ளனர்.
பெண்ட் நகரில் அமைந்துள்ள சில்வர் ரெயில் ஆரம்பப் பாடசாலையில், வியாழக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
16 வயதுடைய சிறுவன் ஒருவர் பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 5, 8 மற்றும் 11 வயதுடைய மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏழு வயதுடைய சிறுவன் ஒருவரும் 54 வயதுடைய ஆசிரியர் ஒருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைக்குள் சந்தேகநபர் நுழைவதைக் கவனித்த ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து சென்று துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் சந்தேகநபர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் மற்றும் சந்தேகநபருக்கும் பாடசாலைக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Font size:
Print
Related Posts
