அமெரிக்க குழந்தைகளுக்கும் SpaceX பங்குகள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் SpaceX நிறுவனத்தின் பங்குகளை வழங்கும் திட்டம் தொடர்பில், எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

குறித்த தகவல்களின்படி, அமெரிக்காவில் உள்ள சுமார் 7.2 கோடி குழந்தைகளுக்கு தலா ஒரு பங்கு வழங்கப்பட்டால், ஒவ்வொரு பங்கின் மதிப்பும் 146 அமெரிக்க டொலர்களாகக் கணக்கிடப்படும் நிலையில், மொத்த மதிப்பு சுமார் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை 2027ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும், ‘ட்ரம்ப் கணக்குகள்’ (Trump Accounts) திட்டத்தின் ஊடாகப் பங்குகளை வழங்குவது தொடர்பிலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், பங்குகளைப் பெறுவதற்கான தகுதிகள், அவற்றை விநியோகிக்கும் முறை மற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி உள்ளிட்ட முழுமையான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts