தங்கத்திற்குப் பெயர்பெற்ற துபாயில், 24 காரட் தங்கத்தால் உருவாக்கப்படும் நடைபாதை விரைவில் திறக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய வர்த்தக மற்றும் சுற்றுலா மையமான துபாய், தங்க நகைகள் மற்றும் தங்க வர்த்தகத்திற்குப் புகழ்பெற்ற நகரமாகத் திகழ்கிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கம் மற்றும் ஆபரணங்களை வாங்குவதற்காக இங்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், துபாயின் தெய்ரா பகுதியில் அமைந்துள்ள தங்க வர்த்தக மாவட்டத்தை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில், 24 காரட் தங்கத்துடன் தொடர்புடைய பிரமாண்டமான நடைபாதைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடைபாதை உலகின் மிக நீளமான தங்க நடைபாதையாக அமையும் எனக் கூறப்படுவதுடன், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தங்கம், ஆபரணங்கள், மொத்த விற்பனை மற்றும் முதலீடு தொடர்பான பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள துபாயின் தங்க மாவட்டம், சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் முக்கிய இடமாக விளங்குகிறது.
இந்தப் புதிய திட்டம் நிறைவேற்றப்பட்டால், துபாயின் சுற்றுலா ஈர்ப்பை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வால் பல நாடுகளில் நகை வாங்குவது பொதுமக்களுக்குச் சவாலாக மாறியுள்ளது. இத்தகைய சூழலில், 24 காரட் தங்க நடைபாதை குறித்த செய்தி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியு
