ஈரானின் ஆயுதக் கொள்வனவு வலையமைப்பு அம்பலம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரான் தனது ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக இரகசிய வலையமைப்பொன்றைச் செயற்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, வெடிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும், பெரிய சரக்குப் போக்குவரத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்காக சுமார் 5,000 நிறுவனங்களைக் கொண்ட வலையமைப்பை ஈரான் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், போர் நிலைமைகளுக்கு மத்தியிலும் இந்த வலையமைப்பின் ஊடாக ஈரான் தொடர்ந்து தேவையான பொருட்களைப் பெற்றுவருவதாகக் குறித்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் ஏவுகணை எரிபொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள், வெடிபொருட்கள், விமானப் பாகங்கள், தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் இராணுவப் பயன்பாட்டுக்கு மாற்றியமைக்கக்கூடிய கனரக வாகனங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

சீனா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தப் பொருட்கள் வந்துள்ளதாகக் கப்பல் போக்குவரத்து மற்றும் இறக்குமதி ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

எனினும், இறக்குமதி செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆயுதத் தயாரிப்புக்காகவே பயன்படுத்தப்பட்டன என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றும், அவற்றில் சில பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் இராணுவப் பயன்பாட்டுக்கும் ஏற்ற இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts