தமிழ்நாட்டில் கொரோனோவால் ஒருவர் பலி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 636 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Posts
©   Thedipaar

தல–தளபதி சந்திப்பு

©   Thedipaar

யாழில் கொடூர கொலை !