எதிர்ப்பு நடவடிக்கையில் மின்சார ஊழியர் சங்கம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்துக்கு எதிராக இன்று முதல் மூன்று நாள்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெறுமாறு மின்சக்தி அமைச்சருக்கு அறிவிக்கபட்டுள்ளது என்று  இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இன்று முதல் மூன்று நாள்களுக்குப் பாரியளவிலான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் ரஞ்சன் ஜெயலால்  தெரிவித்துள்ளார். 


Related Posts