ஜப்பானில் தீப்பற்றி எரியும் விமானத்தில் இருந்து வெளியேறிய பயணிகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம், கடலோர காவல்படை விமானம் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

பயணிகள் விமானம் தரையிறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டது. மோதிய வேகத்தில் தீப்பற்றியபடி பாய்ந்து வந்த பயணிகள் விமானம் சிறிது தூரம் ஓடுபாதையில் சென்று, அதன்பின் நின்றுவிட்டது. அதேசமயம் கடலோர காவல் படையின் விமானமும் தீப்பிடித்து எரிந்தது.

ஒருபுறம் விமானம் தீப்பிடித்து எரிய, மறுபுறம் எமர்ஜென்சி ஸ்லைடு வழியாக பயணிகள் அவசரம் அவசரமாக சறுக்கிக்கொண்டு வெளியேறினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

Related Posts