தென்கொரியாவில் ஊடகங்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லீயின் பெயர் எழுதிய பேப்பரால் செய்யப்பட்ட முகமூடியை மாட்டியபடி இளைஞர் ஒருவர் லீயை நோக்கி முன்னேறியுள்ளார். சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் தனது கையில் வைத்திருந்த கத்தியால் லீயின் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோட முயன்றார்.
ஆனால் உடனடியாக செய்தியாளர்கள் அந்த நபரை மடக்கி பிடித்தனர். இதனிடையே கழுத்தில் காயத்துடன் கீழே விழுந்த லீக்கு ரத்தம் வெளியேறியதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அங்கு குவியத் தொடங்கினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து சென்ற போலீஸாரும், மீட்புப் படையினரும் லீயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த வீடியோ நேரலையில் ஒளிபரப்பான நிலையில் தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே இந்த நபர் எதற்காக லீயை குத்தினார் என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.