இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்னவுக்குப் பதிலாக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் அணியின் துணை தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனஞ்சய மற்றும் குசல் இருவரும் அணிகளின் தலைவர் மற்றும் துணை தலைவராக செயல்படுவார்கள் என்றும் இலங்கை தேர்வுக் குழுவின் தலைவர் உபுல் தரங்கா தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை ஒருநாள் அணியை அவர் அறிவித்துள்ளார். ஒருநாள் அணிக்கு குசல் மெண்டிஸ் தலைமை தாங்குவார், துணைக் தலைவராக சரித் அசலங்க உள்ளார்.
21 வீரர்களைக் கொண்ட ஆரம்பக் குழு சமீபத்தில் பெயரிடப்பட்டது.
எனினும், அந்த அணியில் இருந்த கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, அசித பெர்னாண்டோ மற்றும் சாமிக்க குணசேகர ஆகியோர் இறுதி அணிக்கு பெயரிடப்படவில்லை.