அரை மணி நேரத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் - அலறும் ஆப்கான்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

ஆப்கானிஸ்தானில் பிற்பகல் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 2.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காபூல் அருகே 29 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று நள்ளிரவில் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பைசாபாத் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் முறையே ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.

Related Posts