தாயை பிரிந்து கண்டுபிடித்த குட்டி யானை மடியில் தூக்கம்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக புலி, சிறுத்தை, கரடி மற்றும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறி எஸ்டேட் பகுதிகளில் உலா வருகிறது. 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வால்பாறை அடுத்துள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட பன்னிமேடு பகுதியில் தாயைவிட்டு பிரிந்த குட்டி யானை ஒன்று, தவித்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தாய் யானை இருக்கும் இடத்திற்கு குட்டியானையை வாகனத்தின் மூலம் கொண்டு சென்று, சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குட்டியை தாய் யானை கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்த்தனர். 

ஐந்து மணி நேரம் கழித்து தாயை சந்தித்த குட்டியானை மிகுந்த மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து ஓடி தாயுடன் சேர்ந்தது. இதையடுத்து இந்த யானை கூட்டத்தை நான்கு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று ஒரு தனியார் தேயிலை எஸ்டேட் பகுதியில் தாய் யானையின் அரவணைப்பில் அதன் மடியில் குட்டி யானை படுத்திருந்த வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Related Posts