7ம் வகுப்பு மாணவர்கள் மது அருந்தி, புத்தாண்டு கொண்டாட்டம்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோடவரம் நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்திலேயே அரசு விடுதியும் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

 இந்நிலையில், பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர், கடந்த 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டனர். இதற்காக, இரவு ரகசியமாக விடுதியில் இருந்து 16 மாணவர்கள், விடுதியை விட்டு வெளியேறினர்.

அதே ஊரை சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்களுடன் சேர்ந்து, அந்தப்பகுதியில் புதிதாக கட்டுப்பட்டு வரும் கட்டிடத்திற்கு சென்றனர். அங்கு அனைவரும் ஒன்று கூடி பீர் வாங்கி வந்து குடித்து, பிரியாணி சாப்பிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏழாம் வகுப்பு மாணவர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை வேறு ஒரு நபர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். இதனைக் கவனித்த மாணவர்கள் அவரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related Posts