6 - 9 மாத குழந்தைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தெரிவு செய்யப்பட்ட 09 மாவட்டங்களில் 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி மேலதிக டோஸ் ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி எதிர்வரும் 6ஆம் திகதி இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக டாக்டர் சமித்த கினிகே தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களை முதன்மையாகக் கொண்டு இந்தத் தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. 

சிறு குழந்தைக்கு அம்மை நோய் வந்தால் அது நீண்டகாலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இதனால் தடுப்பூசியின் கூடுதல் டோஸ் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 


Related Posts