அவதானம் தேவை! முக்கிய செய்தி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மாலபேயில் தாயும் மூன்று பிள்ளைகளும் விஷம் அருந்தி (டிச. 30) தற்கொலைசெய்துகொண்டார்கள். கொட்டாவ, மாக்கும்புரவில் உள்ள குடியிருப்பில் அந்தப் பிள்ளைகளின் தந்தை ஏற்கனவே (டிச. 28) விஷம் அருந்தி தற்கொலைசெய்துகொண்டிருந்தார்.
 
குடும்பச் சுமை, இழப்பின் வலி என்ற கோணத்தில் நாம் பார்த்தோம் அல்லவா?
பொலிஸ் புலனாய்வில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
யக்கலவில் யுவதியொருவரும் (ஜன.02) மஹரகமவில் இளைஞர் ஒருவரும் (ஜன.02) அவ்வாறே விஷம் அருந்தி உயிர்மாய்த்திருக்கிறார்கள்.
 
மாக்கும்புர நபரின் போதனையின் அடிப்படையிலேயே இவர்கள் விஷம் அருந்தியிருக்கிறார்கள். இந்த நான்கு சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. அவர்கள் பயன்படுத்திய விஷம், பொதியிடப்பட்ட முறைமையும் ஒன்றாகவே உள்ளன.
 
இந்தக் காலகட்டத்தில் விஷம் அருந்தி உயிர்மாய்த்தால் மிகச் சிறந்த வாழ்க்கை வாழக்கூடிய மற்றுமொரு இடத்தில் புதிதாக பிறப்பீர்கள் என போதனை நடத்தப்பட்டுள்ளது.
 
காலி, அநுராதபுரம், குருநாகல் ஆகிய பகுதிகளிலும் இந்தப் போதகர் தொடர்பாடல்களை மேற்கொண்டுள்ளார். ஹபராதுவையில் இறுதியாக போதனை நடத்தியுள்ளார்.
 
இந்த விடயம் குறித்து மிக அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 

Related Posts