யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் கொவிட் தற்பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பது சிறந்தது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயினால் ஒருவர் இறந்துள்ளார் எனவேயாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் தற்காப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். சுகாதார அமைச்சிடமிருந்து எமக்கு எந்தவித அறிவுறுத்தல்களும் இது தொடர்பில் வழங்கப்படவில்லை ஏற்கனவே இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக அறிவுறுத்தப்படும் போது எழுத்து மூலமாக அறிவிக்கப்படும் ஆனால் தற்போது அவ்வாறு அறிவிக்கப்படவில்லை .
எனினும் வடக்கு மாகாணத்தில் ஒரு கொரோனா இறப்பு சம்பவித்ததுள்ளதால் பொதுமக்கள் கொரோனா தற்காப்பு நடைமுறைகளை பின்பற்றுவது சிறந்தது
அதேபோல இந்த காலப்பகுதியில் சுவாசம் சம்பந்தமான நோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடும் எனவே பொதுமக்கள் தற்போது ள்ள சூழ்நிலையில் கொரோனா தற்காப்பு நடைமுறைகளை பின்பற்றுவது சாலச் சிறந்தது எனவும் தெரிவித்தார்,
*NEWS |