30 ஆண்டு சாதனையை முறியடித்த 13 வயது சிறுவன்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

டெட்ரிஸ் என்ற வீடியோ கேம் விளையாட்டில் 30 ஆண்டுகளாக முறியடிக்க முடியாமல் இருந்த சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் முறியடித்துள்ளார்.

இதை முழுவதுமாக முடிக்க முடியாதபடி இதனை உருவாக்கியவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்த 30 ஆண்டுகளில் இதுவரை ஒருவர் கூட இந்த விளையாட்டை முழுமையாக முடித்ததில்லை. ஒரே ஒரு முறை செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி ஒன்று இந்த விளையாட்டை முழுமையாக முடித்திருந்தது. ஆனால், மனிதர்கள் யாரும் இந்த விளையாட்டை முடிக்கவில்லை.

இந்நிலையில் வரலாற்று சாதனையாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த 13 வயது வில்லிஸ் கிப்ஸன் என்பவர் இந்த விளையாட்டை முழுமையாக முடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts