பெண் நீதிபதியை அடிக்கப் பாய்ந்த குற்றவாளி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் ஒரு அடிதடி வழக்கில் டியோப்ரா ரெட்டன் (30) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தாக்கியதில் எதிர்தரப்பைச் சேர்ந்தவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இதனால் ரெட்டன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். 

இந்த வழக்கின் விசாரணை நிவேடா நகர நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி மேரி கே ஹால்தஸ் நேற்று தீர்ப்பு வழங்கினார். முன்னதாக ரெட்டன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கும் வகையில் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ரெட்டன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது கட்சிக்காரரை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைத்தார். அதை நீதிபதி மேரி மறுத்ததால் கடும் ஆத்திரம் அடைந்த ரெட்டன் கண்ணிமைக்கும் நேரத்தில் நீதிபதியின் இருக்கைக்கு முன்பாக இருந்த மேஜையின் மீது பாய்ந்து அவரை தாக்க முயன்றார்.

 இதனால் மேஜையின் மீது இருந்த கொடி, சின்னங்கள் சிதறி கீழே விழுந்தன. இதனை சற்றும் எதிர்பாராத நீதிமன்ற ஊழியர்கள் சுதாரித்துக்கொண்டு ரெட்டனை மடக்கிப் பிடித்தனர்.

Related Posts