சபரிமலை பிரசாதத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு.

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 99 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தொடந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய பிரசாதமான அரவணை பாயாசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஒருவருக்கு 2 டின்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த தட்டுப்பாடுக்கு தீர்வு கிடைக்கும் என தேவஸ்தானம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts