கீபோர்டில் ஏற்படும் மாற்றம்! புதிதாக லேப்டாப் வாங்குவோர் கவனத்திற்கு!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் 1994-ம் ஆண்டில் விண்டோஸ் மெனு உபயோகத்துக்கான ஸ்டார்ட் பட்டன் ஒன்றை கீ போர்டில் கடைசியாக புகுத்தியது. பின்னர் 30 ஆண்டுகள் இடைவெளியில், அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஏஐ பட்டன் ஒன்றை, தனது கீ போர்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பட்டன் மைக்ரோசாப்டின் புதிய செய்யறிவு தொழில்நுட்பமான கோபைலட்டை பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பேஸ் பட்டனின் வலதுபுறம் இந்த ஏஐ பட்டன் இடம்பெற இருக்கிறது. வெறும் இணையவழிச் சேவைகள் மட்டும் இல்லாமல் உள்பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த கோபைலட் செயல்படும் எனக் கூறப்படுகிறது..புதிதாக கம்ப்யூட்டர் வாங்க விரும்புவோர், இந்த மாற்றங்களை உள்ளடக்கிய கீ போர்டை வாங்குவது நல்லது.

Related Posts