Font size: 15px12px
Print
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலமும் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை அறிமுக செய்தது. இந்த இலவச பேருந்து திட்டமானது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் ஆண்கள் மத்தியில் பல்வேறு குற்றசாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது.
அதாவது அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பதால் ஆண்களுடைய சீட்டையும் பெண்களே ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். இதனால் ஆண்களுக்கு இருக்கைகள் கிடைக்காமல் போகிறது. வேறு பேருந்துகளில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தெலுங்கானாவில் ஆண்கள் மட்டும் பயணம் செய்யும் பொருட்டு சிறப்பு பேருந்து அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Posts