உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது.
இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள இந்தியா முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நடிகர் ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி ஆகியோர் நேரில் அழைப்பிதழ் வழங்கினர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ஜனவரி 21ம் தேதி நடிகர் ரஜினிகாந்த், அவருடைய மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணா மூவரும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
Font size: 15px12px
Print
Related Posts