சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒன்றுமே கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிறைய கொடுத்துள்ளது.
2014 - 2023 வரை தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. அதே நேரம் மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி என கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிய வீடியோவையும் இணைத்துள்ளார்.
அந்த பதிவில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம், ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் எனப் பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம்... இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? என இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
Font size:
Print
Related Posts