வைரலாகும் விஜயகாந்த் தம்பியின் புகைப்படம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜயகாந்த் மரணம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கே கடும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அவர் இறந்த மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் அவருக்கு அஞ்சலி செலுத்த கூட்டம் அலைமோதுகிறது. விஜயகாந்த் மதுரையில் பணக்கார வீட்டு மகனாக வளர்ந்தும் கூட, சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, அதன்பின் தனது திறமையை நிரூபித்து ஜெயித்தவர். இவர் உடன் பிறந்தவர்கள் 11 பேர். அவரது அப்பாவுக்கு 6 ஆண் குழந்தைகள் மற்றும் 6 பெண் குழந்தைகள்.

விஜயகாந்த் சென்னையில் செட்டில் ஆன நிலையில், மற்றவர்களும் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். மதுரையில் இருக்கும் பூர்வீக வீட்டில் தற்போது விஜயகாந்தின் தம்பிகள் இருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். செல்வராஜ் அங்கு மதுரையில் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறாராம். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு தனது பூர்வீக வீட்டுக்கு செல்வதை குறைத்துக்கொண்டாராம். தற்போது விஜயகாந்த் தம்பியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Posts
©   Thedipaar

முட்டைக்கு VAT வரி

©   Thedipaar

RBI-யின் புதிய ரூல்ஸ்!