Font size: 15px12px
Print
பீகார் மாநிலம்: கூலி தொழிலாளியான மகேஸ்வர் கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு பிஹாரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய மகேஸ்வர் தனது மனைவி ராணிகுமாரியிடம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட வேண்டாம் என்று கண்டித்துள்ளார்.
இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவுக்கு கிளம்ப இருந்த மகேஸ்வர் தனது மனைவியின் குடும்பத்தினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து ராணி குமாரியின் தாய் வீட்டில் மகேஸ்வர் சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகேஸ்வர் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராணி குமாரி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Related Posts