Font size: 15px12px
Print
விருதுநகர் மாவட்டத்தில் சிவா என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் இந்த கடையில் மிரிண்டா பாட்டிலை வாங்கி குடித்துள்ளார். இந்நிலையில், சுந்தர்ராஜிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.. இது குறித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சுந்தர்ராஜ் கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சூப்பர் மார்க்கெட் நிர்வாகி சிவா சுந்தரராஜிற்கு மிரண்டா பாட்டில் வாங்கிய 60 ரூபாயும், மன உளைச்சலுக்கு 5000 ரூபாயும், வழக்கு செலவிற்கு 5000 ரூபாய் என மொத்தம் 10,060 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இனி எல்லா பொதுமக்களும் இவர் போல நீதிமன்றத்தை நாடிவிட்டால் இதுபோன்ற தவறு நடக்க வாய்ப்பே இல்லை.
Related Posts