நீர் நிலைகளில் நீராட செல்வோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

கடந்த இரண்டு நாட்களாக மத்திய மலைநாட்டில் கனத்த மழை பெய்து வருவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் பண்ணையாளர்கள் அன்றாட பணிகளில் ஈடுபட முடியாதுள்ளது.

மவுஸ்சாக்கலை மற்றும் காசல்ரீ மேல் கொத்மலை கென்யோன் லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய கலுகல விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளில் அதிகளவில் நீர் வரத்து உள்ளதால் நீராட செல்வோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், முடிந்த வரை நீர் நிலைகளில் நீராட வேண்டாம் எனவும் நுவரெலியா மாவட்ட அரச அதிபர் நந்தன கலபட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை மத்திய மலைநாட்டில் மழை காரணமாக மண் திட்டுகள் சரியும் அபாயம் உள்ளது.

இதனால் பாரிய மண் திட்டுகள் உள்ள பகுதிகளில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட காவல் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


Related Posts