அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வற் வரி அதிகரிப்பின் காரணமாக பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளன.

இதன்படி பருப்பு, உருளைக்கிழங்கு, சீனி, வெங்காயம், கோதுமை மா உள்ளிட்ட சில பொருட்களின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வற் வரி அதிகரிப்புக்கு முன்னர் 300 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 350 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

சில பகுதிகளில் 290 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சீனி 320 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.


Related Posts