டிவி நேரலை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் புகுந்து தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈக்வடார் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக போதை பொருள் கடத்தல் கும்பல்களில் அட்டகாசங்கள் இருந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான அடால்ஃபோ மக்காஸ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். 

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அடால்ஃபோ தப்பி ஓடினான். இதையடுத்து அந்நாட்டு அதிபர் டேனியல் நோபோ 60 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

சுமார் 20க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு, ராணுவத்தினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் கலவரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் குவாயாகில் நகரில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் லைவ் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் திடீரென தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் புகுந்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் தரையில் படுக்குமாறு அச்சுறுத்திய அவர்கள், தங்களிடம் வெடிகுண்டுகள் இருப்பதாக கூறி, அதனை நேரலை கேமராவில் காட்டியுள்ளனர். 

இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்நாட்டு சிறப்பு அதிரடிப்படை போலீஸார் தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் புகுந்த 13 பேரையும் கைது செய்தனர்.

வீடியோ இணைப்பு: https://twitter.com/CrazyHubb/status/1744906655710540105

Related Posts