செவ்வெறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் பழங்குடி மக்கள் தயாரிக்கும் செவ்வெறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த எறும்பு வகை, தான் வாழும் மரத்தின் இலைகளைக் கொண்டு கூடு நெய்து, தன் குஞ்சுகளை அதில் வளர்க்கிறது. இந்த மலையில் வாழும் பழங்குடி மக்கள், இந்த எறும்புகளை வைத்து துவையல் செய்து உண்கின்றனர். மேலும், இதை அருகில் உள்ள சந்தையிலும் விற்பனை செய்கின்றனர்.

இலையாலான கூட்டை எடுத்து தண்ணீரில் போட்டு இலைகளை தனியே பிரித்துவிட்டு எறும்புகளை, இஞ்சி, பூண்டு, மிளகாய், உப்பை வைத்து அரைத்து துவையல் செய்கின்றனர். 

எறும்பின் குஞ்சுகளையும் இம்மக்கள் பெரிதும் விரும்பி உண்கின்றனர். கை’ எறும்பு துவையலில் புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், ஸிங்க், தாமிரம், அமினோ ஆசிட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

Related Posts