Font size:
Print
2023 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 7000 மணி நேரம் இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் உள்நாட்டு அமைதியின்மைக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் இணைய முடக்கம் நடந்துள்ளதாகக் கூறியுள்ளது. அதோடு உலகின் மற்ற பகுதிகளை விட இந்தியாவில் சமூக ஊடகங்கள் நிறுத்தப்படுவது மிகவும் குறைவாக இருந்தாலும் மத விழாவின் போது மட்டுமே அதிகமாக இணைய தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் ஏற்பட்ட வன்முறை காரணமாக மே முதல் டிசம்பர் வரை 8 மாதம் இணையதளம் தடை செய்யப்பட்டு இருந்தது.இணைய முடக்கத்தால் 6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
Related Posts