Font size:
Print
காசா பகுதியில் போரில் ஈடுபட்டுவரும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ஒரு வித பூஞ்சை நோயால் தாக்குதலுக்குள்ளாகி வருவதாகவும், இப்பூஞ்சை ராணுவவீரர்களிடையே பரவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பரில் காசா பகுதியில் ராணுவ வீரர்கள் சிலருக்கு தோலில் ஒரு வித நோய் தொற்று பாதிப்பு இருந்துள்ளது. இதில் சிகிச்சை பெற்று ஒரு வீரர் இறந்தார்.
சாதாரண நோய் தான் என அலட்சியமாக இருந்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.தற்போது இறந்த அந்த வீரர் ஒருவித பூஞ்சை நோயால் தாக்கப்பட்டுள்ளதும் அது சக வீரர்களுக்கும் பரவியுள்ளது தெரியவந்தது.
இது போன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் தோலில் ஒருவித பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று போரில் ஈடுபட்டு வருவதாகவும் டைம்ஸ் இஸ்ரேல் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
Related Posts