மாடுகளுக்கு பீர் ஊற்றி வளர்க்கும் மார்க்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மாட்டிறைச்சி உற்பத்தியில் கால்பதிக்க உள்ளதாக மார்க் சமீபத்தில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உலகின் சிறந்த மாட்டிறைச்சியை உருவாக்குவதற்காக முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஹவாய் தீவில் உள்ள தனது பண்ணையில், வேக்யூ - ஆங்கஸ் என்ற இரண்டு மாட்டு ரகங்களை வளர்த்து வருவதாகக் கூறியுள்ளார். 

அவற்றிற்கு உலகின் விலை உயர்ந்த மக்காடாமிய கொட்டைகள் உணவாக வழங்கப்படுவதாகவும், மாடுகள் அருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பீர் ஆகியவற்றைக் கொடுத்து பராமரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அவை ஆண்டு ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோ உணவு சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்காகப் பல நூறு ஏக்கர் மக்காடமியா மரங்களை நட்டு வளர்த்து வருவதாகவும் மார்க் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts